‘அப்பாவி தந்தை நீதி கேட்கும் கதை’ - கருணாகரன் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ முதல் தோற்றம்

By செய்திப்பிரிவு

நடிகர் கருணாகரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய விமல் விஷ்ணு இயக்கும் படம் ‘குற்றச்சாட்டு’. இப்படத்தில் நடிகர் கருணாகரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர்கள் தினேஷ் பிரபாகர், முன்னா சைமன், ரியாஸ் கான், ஷிவானி (குழந்தை நட்சத்திரம்) மற்றும் பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரானா கதாநாயகியாக நடித்துள்ளார். எமோஷனல் ஃபேமிலி ட்ராமா த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

படம் குறித்து இயக்குநர் விமல் விஷ்ணு கூறுகையில், “கொச்சியில் பல தமிழர்கள் வசித்து வருகின்றனர். அப்படி கொச்சியில் குடியேறிய அப்பா, அம்மா மற்றும் அவர்களின் அன்பு மகள் இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் ‘குற்றச்சாட்டு’. அவர்களின் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டு, குற்றவாளி நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் போது, அப்பாவி தந்தை தனது மகளுக்கு நீதி கேட்க முயற்சி செய்கிறார்.

படம் ஆறு வெவ்வேறு அடுக்குகளுடன் நான் லீனியர் முறையில் எழுதப்பட்டுள்ளது. இதுவரை படத்தைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தையும் ஈர்க்கும் வகையில் எமோஷனல் மற்றும் த்ரில்லர் தருணங்களின் கலவையாக இருக்கும். படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE