“ஓப்பன்ஹெய்மரை விட உங்கள் படம்தான் பிடித்திருந்தது” - மாதவனை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

By செய்திப்பிரிவு

“எனக்கு ஓப்பன்ஹெய்மர் படத்தை விட உங்கள் படம்தான் பிடித்திருந்தது” என‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படம் குறித்து இயக்குநரும் நடிகருமான மாதவனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதில் நடிகர் மாதவன் இயக்கி நடித்திருந்த ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. இதனையடுத்து பலரும் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில், “வாழ்த்துகள் மாதவன். கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்ரி திரைப்படம் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட தாக்கம் இன்னும் நினைவில் இருக்கிறது. ஓப்பன்ஹெய்மர் படத்தை விட உங்கள் படம்தான் பிடித்திருந்தது” என தெரிவித்துள்ளார்.

‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு மேமாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியாவில் 2022 ஜூலை 1-ம் தேதி படம் வெளியானது. விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்