கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஜீவன்குமார் கார் விபத்தில் பலியானார். கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தி கண் கலங்கினார்.
ஜீவன் குமார் அவரது நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கார்த்தி என்பவர் காரை ஓட்டினார்.
தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஜீவன்குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
கார்த்தி மக்கள் நல மன்றம் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஜீவன்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிச்சடங்கில் திரளான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது நினைவு கூரத்தக்கது.
ஜீவன்குமாரின் இறுதிச்சடங்கில் கார்த்தி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அப்போது குடும்பத்தினர் மிகவும் கண் கலங்கவே, கார்த்தியும் கண் கலங்கினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago