“சூப்பர் ஸ்டார்கள் வெற்றி, தோல்விகளைக் கடந்தவர்கள்” - விஜய் தேவரகொண்டா 

By செய்திப்பிரிவு

சென்னை: “நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 6 தோல்விப் படங்களை கொடுத்த நிலையில் தற்போது ‘ஜெயிலர்’ மூலம் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளார்” என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள ‘குஷி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவின் முந்தைய படங்களின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், “நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 6 தோல்விப் படங்களை கொடுத்தவர். தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளார். சிரஞ்சீவியும் 6, 7 தோல்விப்படங்களை தொடர்ந்து கொடுத்தவர்தான். ஆனால் சங்கராந்தியில் வெளியான அவரது படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சிரஞ்சீவி தெலுங்கு திரைத் துறையையே மாற்றியவர். சூப்பர் ஸ்டார்கள் வெற்றி, தோல்விகளைக் கடந்தவர்கள். ரஜினி, சிரஞ்சீவி படங்கள் சரியாக போகவில்லை என்றால் அவர்களை ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். அதை நான் மரியாதைகுறைவாக பார்க்கிறேன். அவர்கள் திரைத் துறைக்கு மிகப் பெரிய பங்களிப்பை செலுத்தியுள்ளனர். எனது சிறு வயதில் ரஜினி திரைப்படங்களை பார்த்துள்ளேன். அது தமிழ் திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இங்கிருந்து வெளியாகும் படங்களுக்கு நாங்கள் பெரிய ரசிகர்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்