தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள் சிலர், மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இன்னொரு பக்கம், டிராவல்ஸ் நடத்தும் டிடி (நபீஷா), தன்னிடம் விமான டிக்கெட் வாங்கி சுற்றுலா செல்லும் செல்வந்தர்களின் வீடுகளில் திருடுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். அதை விளையாட்டுபோல் தன்னுடன் போட்டிப் போட்டுச் செய்யும்படி தனது தம்பி, தம்பித்துரையை (ரியோ ராஜ்) ஒரு வீட்டுக்கு அனுப்புகிறார். திருட்டு விளையாட்டில் அக்காவை ஜெயிக்க, அந்த வீட்டுக்குள் நுழையும் தம்பி, அங்கே ஒளிந்திருக்கும் சைக்கோவிடம் சிக்கிக் கொள்கிறார். தம்பித்துரை அங்கிருந்து தப்பித்தாரா, மருத்துவர்களை கொன்றது யார் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம்.
டாக்டர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்பதில் ‘உறுப்புத் திருட்டை’ சாடும் இயக்குநர், ‘சைக்கோ’ கதாபாத்திரம் மாத்திரைகளை வாங்கி சுயமாக மருத்துவம் செய்துகொள்வது முரண் என்பதை உணரவில்லை. உண்மையில் மருத்துவர்களை யார் கொலைசெய்தார்கள், எப்படிக் கொலை செய்தார்கள் என்பதை அவல நகைச்சுவை வழியாக சஸ்பென்ஸ் குறையாமல் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் ஜோ ஜியாவனி சிங்.
ஒரு பக்கம் கொலைகள், இன்னொரு பக்கம் திருட்டு என விரியும்2 லேயர்களை இணைக்கும் ‘சைக்கோ’வாக வரும் ஜோ ஜியாவினி சிங், சீரியஸான காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார். தனது கதை என்று அவர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒன்றைச் சொல்ல, “நாளை நமதே படக் கதையை உன் கதை மாதிரி சொல்றியா? ஓடிடு!” என்று அவர் விரட்ட, அந்தக் காட்சியின் எதிர்பாராத திருப்பம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
அதேபோல் ‘சிங்கப்பூர் ரஜினி’ என்ற பெயரில் வருபவர், டிராவல்ஸ் அலுவலகத்தில் டிடியைப் பார்த்தபின் அவரை ‘ஜானி’ பட தேவியாக கற்பனை செய்துகொள்ளும் காட்சியில் திரையரங்கம் அமளி துமளியாகிறது. இக்காட்சியில் மாஸ் ஹீரோக்கள் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பதால் விளையும் கேட்டினை நச்சென்று குத்திக்காட்டியிருப்பதற்குப் பாராட்டுகள்.
» சித்தார்த்தின் ‘சித்தா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
» அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ரஜினி தரிசனம்!
கதை நடப்பது சிங்கப்பூரில் எனும்போது தம்பித்துரையாக வரும் ரியோ ராஜ் ஏன் சென்னைத் தமிழ்ப் பேச வேண்டும் என்பதை இயக்குநர் விளக்கவில்லை. என்றாலும் ரியோ ராஜின்நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. டிடியாக வரும் நபீஷாவும் புதுமுகம்போல் தெரியாத அளவுக்குநடித்திருக்கிறார். சலீம் பிலால் ஜிதேஷின் ஒளிப்பதிவு சிங்கப்பூரின் வீதிகளையும் வீடுகளின் அதிநவீன உள்ளரங்குகளையும் பளிச்சென்று காட்சிப்படுத்தியிருக்கிறது. எல்லாகதாபாத்திரங்களையும் கச்சிதமாக இணைக்கும் சிதிலமான திரைக்கதைக்கு அட்டகாசமான இசையை வழங்கியிருக்கிறார் பிரவீன் விஸ்வா மாலிக்.
‘புரோக்கன் ஸ்கிரிப்ட்’ என்று தலைப்பில் இருந்தாலும் அதிகம் சுற்றலில் விடாமல், சொல்ல வந்ததைத் தெளிவாகவே சொல்லிவிடும் இந்த முயற்சியை பார்த்து, மனம் விட்டுச் சிரிக்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago