‘தனுஷ் 50’ படப்பிடிப்பு அக்டோபரில் நிறைவு?

By செய்திப்பிரிவு

சென்னை: தனுஷ் நடித்து வரும் 50-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து, தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் நிறையவடையும் என்று திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த ஆண்டின் இறுதியில் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இது குறித்த அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்