“ரஜினி மீதான அன்பு தொடர்கிறது” - ’காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் தூதர்

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஸுகி நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலும், தமன்னாவின் நடனமும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகின. ரீல்ஸ்களில் ஆயிரக்கணக்கானோர் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர். இப்பாடல் யூடியூபில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

இந்த நிலையில், இப்பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஸுகி நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவருடன் ஜப்பானைச் சேர்ந்த பிரபல யூடியூபரான மாயோ சானும் நடனம் ஆடுகிறார். மேலும் இந்த வீடியோவை பகிர்ந்த ஹிரோஷி சுஸுகி, ’ரஜினிகாந்த் மீதான அன்பு தொடர்கிறது’ என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE