படகுப் பயணம் சட்டத்தை மீறுவதாகாது என்றே நினைக்கிறேன்: கார் சர்ச்சைக் குறித்து அமலாபால்

By ஸ்கிரீனன்

படகுப் பயணம் சட்டத்தை மீறுவதாகாது என்றே நினைக்கிறேன் என்று கார் சர்ச்சைக் குறித்து அமலாபால் தெரிவித்துள்ளார்.

வாகனங்களுக்கு அளிக்கப்படும் குறைந்த வரியைப் பெற புதுச்சேரியில் தங்கி இருப்பது போன்று ஆவணங்களைத் தயாரித்து திரை நட்சத்திரங்கள் தொடங்கி விஐபிக்கள் வரை பலரும் உயர் ரக கார்களைப் பதிவு செய்து வருவது உறுதியாகியுள்ளது. நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில் என புதுச்சேரியில் கார் பதிவு செய்தோர் விவரங்களை போலீஸார் திரட்டி வருவதால் பலர் கலக்கமடைந்துள்ளனர்.

இந்த சர்ச்சைத் தொடர்பாக அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சில சமயங்களில் நான் நகரின் வேடிக்கைகளிலிருந்தும், தேவையற்ற யூகங்களிலிருந்தும் தப்பி ஓடிவிட வேண்டும். இப்போதைக்கு படகுப் பயணம் செல்ல விரும்புகிறேன், அது சட்டத்தை மீறுவதாகாது என்றே நினைக்கிறேன்.. அல்லது என் ‘நலம் விரும்பி’களிடம் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமா?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்