தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா - சேகர் கம்முலா பட அப்டேட் 

By செய்திப்பிரிவு

தனுஷின் ‘டி51’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தை முடித்துவிட்டார். இதில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார் உட்படப் பலர் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இதை அடுத்து, தனது 50 படத்தை இயக்கி நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உட்படப் பலர் நடிக்கின்றனர். இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். தலைப்பிடப்படாத இப்படம் ‘டி51’ என அழைக்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என படக்குழு அறிவித்துள்ளது. ராஷ்மிகாவை பொறுத்தவரை அவர் ‘அனிமல்’ படத்தை முடித்துள்ளார். அடுத்து ‘புஷ்பா’, ‘ரெயின்போ’ படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்