நரகாசூரன் படப்பிடிப்பு 41 நாட்களில் நிறைவு: கவுதம் மேனன் ஆச்சரியம்

By ஸ்கிரீனன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவந்த 'நரகாசூரன்' படப்பிடிப்பை 41 நாட்களில் திட்டமிட்டப்படி நிறைவு செய்ததற்கு ஆச்சரியப்பட்ட கவுதம் மேனன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

'நரகாசூரன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்தது. இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நவம்பர் 14-ம் தேதி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.

இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில், "41 நாட்களில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவு. அருமையான பணி கார்த்திக் நரேன். தயாரிப்பாளராக இருப்பதில் கூடுதல் சாதகம் இருக்கிறது. படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'நரகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. சந்தீப் கிஷன் மற்றும் ஆத்மிகா இருவருடைய காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டது.'துருவங்கள் பதினாறு' போலவே ஊட்டி பின்னணியில் இப்படத்தையும் உருவாக்கி வருகிறார் கார்த்திக் நரேன்.

அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்