“நல்லது கெட்டதுன்னு எதுவுமேயில்ல” - சசிகுமார், சரத்குமாரின் ‘நா நா’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: சசிகுமார், சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘நா நா’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘சலீம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் என்வி நிர்மல்குமார் இயக்கியுள்ள படம் ‘நா நா’. இப்படத்தில் சசிகுமார் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாரதிராஜா, சித்ரா சுக்லா, ரேஷ்மா வெங்கடேஷ், பக்ஸ் (பகவதி பெருமாள்), பிரதீப் ராவத், எஸ்கே கனிஷ்க், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஹர்ஷ வர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: ‘இங்க நல்லது கெட்டதுன்னு எதுவுமே இல்ல’ என்ற வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. சரத்குமார் போலீஸாக நடித்துள்ளார். இதன் மூலம் ஆடு - புலி ஆட்டமாக படம் இருக்கும் எனத் தெரிகிறது. “இந்த உலகத்துல இரண்டு விதமான மனிதர்கள் தான். ஒன்னு வேட்டையாட்றவன், இரையாகுறவன்” என்ற வசனம் மூலம் சசிகுமாரை சரத்குமார் பிடிக்கும் போராட்டமாக கதை இருக்கும் என கணிக்கமுடிகிறது.

இருவருக்குமான காம்போவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். காரணம் அண்மையில் ‘போர்தொழில்’ கொடுத்த வெற்றி.

படத்தின் ட்ரெய்லரில் இசையும், காட்சிகளும் கவனிக்கும்படியாக உள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்