கார்த்தி மற்றும் விஜய் சேதுபதி படங்களின் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
மேலும், கரு.பழனியப்பன் - அருள்நிதி இணையும் 'புகழேந்தி எனும் நான்' படத்தின் நாயகியாக நடிக்க பேசியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கோகுல் - விஜய் சேதுபதி இணைப்பில் உருவாகி வரும் 'ஜுங்கா' படத்தின் முக்கிய கதாபாத்திரத்திற்கும் பேசியிருக்கிறார்கள்.
எதில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று ப்ரியா பவானி சங்கரிடம் கேட்ட போது, "எந்த படமாக இருந்தாலும், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து தகவல் வந்தால் மட்டுமே உண்மை" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago