சந்தானத்தின் ‘கிக்’ திரைப்படம் செப்.1-ல் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'கிக்'. கன்னடத்தில் வெளியான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’ , ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சந்தானத்தின் ஜோடியாக, 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜனவரி மாதமே வெளியானது. எனினும் இறுதிகட்ட பணிகள் காரணமாக இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்துவந்தது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE