'அறம்' மிகச்சிறந்த அரசியல் திரைப்படம் என்று இயக்குநர் சுசீந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அறம்'. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
'அறம்' குறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
'அறம்' - மிகச்சிறந்த அரசியல் திரைப்படம்
இன்று என் குடும்பத்தினருடன் 'அறம்' திரைப்படம் பார்த்தேன். மிகவும் நேர்த்தியான திரைப்படம், இயக்குநர் கோபி அவர்கள் இந்த கதையை கையாண்ட விதமும், திரைக்கதை அமைத்த விதமும் மிகவும் அருமை.
நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை அனைத்தும் மிகவும் நேர்த்தி. நயன்தாரா-க்கு அவருடைய திரையுலக வாழ்வில் அற்புதமான கதாபாத்திரம். அதை அவர் உணர்ந்து மிக சிறப்பாக நடித்துள்ளார்.
இப்படத்தில் நடித்த அப்பெண் குழந்தை, குழந்தையின் அண்ணன், குழந்தையின் அம்மா, குழந்தையின் அப்பா, எம்.எல்.ஏ என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அக்குழந்தையின் அப்பாவாக நடித்திருந்த ராமச்சந்திரன் எனது நீண்டக்கால நண்பர்.
அனேக நாடக நடிகர்களை பயன்படுத்தி அவர்களுக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் கோபி அவர்களுக்கு நன்றி. இயக்குநர் கோபி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த புத்துணர்ச்சி
இவ்வாறு சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.
'அறம்' படத்துடன் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' படமும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago