பைனான்சியர் அன்புசெழியன் சிறந்த மனிதர், மிகவும் நல்லவர் என்று தேவயானி தெரிவித்திருக்கிறார்
கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் அசோக்குமார். அவரது தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பலரும் அன்புசெழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், அவருக்கு ஆதரவாக தேவானி பேசியிருப்பதாவது:
அன்பு செழியனிடம் நாங்கள் ’காதலுடன்’ படத்துக்காக பணம் வாங்கியிருந்தோம். அவர் சிறந்த மனிதர். எங்கள் மீதிருந்த நம்பிக்கையில்தான் அவர் எங்களுக்கு பணம் கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு எங்கள் மீது எப்போது ஒரு நம்பிக்கை இருந்தது. எங்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இருந்தது. படத்தை முடித்து அவரிடம் சரியான நேரத்தில் பணத்தை நாங்கள் திருப்பியும் கொடுத்து விட்டோம்.
என்னைப் பொறுத்தவரை அவர் சிறந்த மனிதர். எப்போது சந்தித்தாலும் இனிமையாகப் பேசுவார். படப்பிடிப்பின்போது அவர் எங்களுக்கு எந்த தொந்தரவும், துன்புறுத்தலும் கொடுத்ததில்லை.
அவர் எங்களிடம் நேர்மையாக நடந்து கொண்டார். நாங்களும் நேர்மையாக நடந்து கொண்டோம். நான் மரியாதை இல்லாத இடத்திலும் மரியாதை இல்லாத மனிதர்களிடத்திலும் பக்கத்தில் கூட செல்ல மாட்டேன். எங்களைப் பொறுத்தவரை அன்புசெழியன் நல்லவர்
இவ்வாறு தேவயானி தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
57 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago