அன்புசெழியன் எப்போதும் நெருக்கடி கொடுத்ததே கிடையாது: இயக்குநர் சுந்தர்.சி ஆதரவு

By ஸ்கிரீனன்

அன்புசெழியன் எப்போதும் நெருக்கடி கொடுத்ததே கிடையாது என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சுந்தர்.சி தெரிவித்திருக்கிறார்.

கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் அசோக்குமார். அவரது தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பலரும் அன்புசெழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், அவருக்கு ஆதரவாக இயக்குநர் சுந்தர்.சி ஆடியோ வடிவில் பேசியிருப்பதாவது:

கடந்த 12 வருடங்களாக தயாரிப்பாளராக இருக்கிறேன். தயாரிப்பாளராக 'கிரி' என் முதல் படம். சினிமாவில் கந்துவட்டி என்ற விஷயத்தை கேள்விப்பட்டதில்லை. இதுதான் உண்மை.

கடந்த 8 வருடங்களாக நான் தயாரிக்கும் படங்களுக்கு அன்புவிடமிருந்துதான் பைனான்ஸ் வாங்கி வருகிறேன். அவர் ஏதோ எழுதி வாங்கிக் கொண்டார் என்று வரும் செய்திகளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் என்னிடமிருந்து அவர் எதையுமே எழுதி வாங்கியதில்லை.

'கலகலப்பு 2' படத்துக்குக் கூட அவர்தான் பைனான்ஸ் செய்துள்ளார். செக் கொடுத்து இவ்வளவு பணம் என்று வாங்கியுள்ளோம். வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார் என்று மற்றவர்கள் சொல்வது எல்லாம் வடிகட்டிய பொய். எனது அனுபவத்தில் அப்படி எந்தவொரு விஷயமுமே கிடையாது. சில முறை பணம் கொடுப்பது தவறியுள்ளது. எனக்கே மனசாட்சி உறுத்தும், அப்போது 'அண்ணே.. ஒரு வாரம் தாமதமாகிறது. அடுத்த வாரம் தந்துவிடுகிறேன்' என்று கூறிய போது 'வரும் போது கொடுத்து அனுப்புங்கள்' எனக்  கூறிவிடுவார்.

அதே போன்று, பட வெளியீட்டின் போது மொத்தப் பணத்தையும் கொடுத்துவிட்டுதான் படத்தை வெளியிட வேண்டும் என்று சொல்வார்கள். அதே போன்று அன்புசெழியன்  எப்போதுமே நெருக்கடி கொடுத்ததே கிடையாது. சினிமா கஷ்டம் தெரிந்த பைனான்சியர் அன்பு. அவரிடம் இத்தனை ஆண்டுகள் பைனான்ஸ் வாங்கி வருகிறேன். இத்தனை ஆண்டுகளில் எந்தவொரு கசப்பான அனுபவம் கிடையாது. நடுராத்திரியில் கூட பணம் வேண்டுமானால் தொலைபேசியில் கேட்கலாம். எப்போதுமே அனுசரித்துப் போக கூடிய பைனான்சியர் அன்பு.

இதுவரை என் படங்களின் வெளியீட்டு உரிமை எதையுமே அவர் கேட்டதில்லை. எனக்கொரு படம் செய்து கொடுங்கள் என கேட்டிருக்கிறாரே தவிர, இப்படத்தின் வெளியீட்டு உரிமை என கேட்டதே இல்லை.

அசோக்குமார் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். தயாரிப்பாளர் ஒருவர் பைனான்ஸ் பிரச்சினையில் மாட்டிக் கொண்டார் என்றால் அதற்கு பைனான்சியரை குறை சொல்வது எந்தவகையில் நியாயம் என தெரியவில்லை. சினிமாவுக்கு தேவை பக்காவான திட்டமிடல். படத் தயாரிப்பு தொடங்கும் முன்பே, எவ்வளவு பட்ஜெட், எவ்வளவு காலம் என்பதை எல்லாம் முடிவு செய்தே தயாரிக்க வேண்டும். நீண்ட கால தயாரிப்பாக படத்தை தயாரித்துவிட்டு, பைனான்சியரைக் குறை கூறினால் எப்படி?. ஒரு பைனான்சியர் கொடுத்த பணத்தைக் கேட்பது எந்த வகையில் அநியாயம் என்பது தெரியவில்லை. இது அனைத்து தயாரிப்பாளர்களுக்குமே எச்சரிக்கை மணிதான்.

அன்பு நியாயமான பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர். அவருடைய இந்த நிலைமை வருத்ததிற்குரிய விஷயம்தான். என்றைக்குமே என் ஆதரவு அன்புசெழியனுக்குதான்.

இவ்வாறு சுந்தர்.சி தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்