சென்னை: நடிகர் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படத்தை தயாரிக்கிறார். இப்படத்துக்கு அவரே கதை, திரைக்கதை, வசனமும் எழுதுகிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இதில் பிரபல கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம்ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அவர்களுடன் அர்ஜுனும் இப்படத்தில் முக்கிய வேடத்தில்நடிக்கிறார். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது.
நடிகர் அர்ஜுன், தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்த நினைத்து, தெலுங்கு ஹீரோ விஷ்வக் சென் நடிக்கும் படத்தை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார். இந்நிலையில், விஷ்வக் சென் - அர்ஜுன் இடையே பிரச்சினை ஏற்பட்டது. விஷ்வக் சென் குறித்து குற்றச்சாட்டுகளை கூறிய அர்ஜுன், இனி 100 கோடி கொடுத்தாலும் அவருடன் பணிபுரிய மாட்டேன் என்றார். இந்நிலையில், விஷ்வக் சென்னுக்கு பதிலாக பிரபல கன்னட நடிகர் உபேந்திராவின் அன்ணன் மகன் நிரஞ்சனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி இப்படத்தை அர்ஜுன் இயக்கி வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago