அசோக்.. நீ உயிரோடிருந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்: கவுதம் மேனன்

By ஸ்கிரீனன்

'நீ உயிரோடிருந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்' என்று அசோக் தற்கொலை குறித்து கவுதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.

திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அசோக்குமார் தற்கொலை குறித்து இயக்குநர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"அசோக் உன்னுடைய மரணம் ஈவிரக்கம் அற்ற ஒரு பணப்பிசாசை அடக்கப் பயன்படக்கூடும் என்பதை அறிவேன். ஆனால் நீ உயிரோடிருந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்பியிருப்போம்"

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

24 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்