சென்னை: எழுத்தாளரும் நடிகருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ‘கன்னிமாடம்’ ஸ்ரீராம் கார்த்திக், நாயகனாக நடிக்கிறார். 'கோலிசோடா 2' கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அஜய் அர்ஜுன் புரொடக் ஷன்ஸ்சார்பில் டாக்டர் அர்ஜுன் வழங்குகிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். சித்துகுமார் இசையமைக்கிறார். இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் சிவகுமார், கே.பாக்யரஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
படம்பற்றி அஜயன் பாலா கூறும்போது, "சூழலியல் பின்னணியில் உருவாகும் காதல் கதை இது. இந்தப் பின்னணியில் தமிழில் உருவாகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும் . நான் ஏற்கெனவே உருவாக்க இருந்த படத்துக்காக நா.முத்துக்குமார் ஒரு பாடல் எழுதி கொடுத்திருந்தார். அந்தப் பாடல் இதில் இடம்பெறுகிறது. அவருடைய கடைசி பாடலாக அது இருக்கும். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
58 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago