சென்னை: பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட 20 மொழிகளில் 2400-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள அவர், கூறியதாவது:
கடந்த 3-4 வருடத்துக்கு முன்பு வரை, சினிமா பாடல்களை ரீமிக்ஸ் செய்தார்கள். இப்போது அந்த போக்கு இல்லை. பாடல்களை ரீமிக்ஸ் செய்வதையோ மறு உருவாக்கம் செய்வதையோ நான் விரும்பவில்லை. நான் பாடிய பாடல்களை அப்படி செய்யலாமா? என்று கேட்டால் மறுத்துவிடுவேன். எனது ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் பசுமையான நினைவுகள் இருக்கின்றன. அது உணர்வுபூர்வமானவை. அதனால் அதில் விருப்பமில்லை. இப்போது சுயாதீன பாடல்கள் அதிகமாக வருகின்றன. திறமையானவர்கள் வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக இந்தப் பாடல்கள் அதிகரித்துள்ளன. இதை நாம் கொண்டாட வேண்டும். இன்றைய ரசிகர்களும் வித்தியாசமான இசையை ரசிக்கிறார்கள். காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. இசையும் அப்படித்தான். இவ்வாறு ஸ்ரேயா கோஷல் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago