பைனான்சியர் அன்புச்செழியனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளரான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர் அன்புச்செழியன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தனது கடிதத்தில் எழுதி வைத்திருந்ததால், அது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அன்புச்செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அசோக்குமாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஷால் காட்டமாக தெரிவித்தார். ஆனால், தற்போது வரை அன்புச்செழியன் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரைப் பிடிக்க காவல்துறை தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விஷால் நடித்துவரும் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அப்போது திருநெல்வேலி மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்களை சந்தித்து விஷால் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கேபிள் தொலைக்காட்சியில் புதிய படங்களின் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இன்னும் புதிய படங்கள் ஒளிபரப்பப்படுவதாக தயாரிப்பாளர்களிடமிருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக கேபிள் உரிமையாளர்களின் கருத்துகளை கேட்டு வருகிறேன்.
இனிவரும் காலங்களில் கேபிள் ஒளிபரப்பாளர்களுக்கு புதிய படங்களின் பாடல் வெளியீடு, திரைப்பட முன்னோட்டம் உள்ளிட்டவற்றை வெளியிடும் உரிமையை குறைந்த கட்டணத்தில் வழங்குவது, தொலைக்காட்சி உரிமம் பெறாத சிறிய படங்களை குறிப்பிட்ட பகுதிகளில் திரையரங்கில் வெளியிடுவது, தனியாக உரிமம் வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து வருகிறோம். புதிய படங்களை அனுமதியின்றி ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அசோக்குமார் தற்கொலைக்கான காரணத்தை தெளிவாகக் கடிதத்தில் எழுதி வைத்திருக்கிறார். அதற்கு காரணமான அன்புச்செழியனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்
இவ்வாறு விஷால் பேசினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago