சென்னை: ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ‘Rathamaarey’ லிரிக்கல் வீடியோ நாளை (ஆகஸ்ட்5) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர்' படம் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இதில் ரஜினியின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக் கதை ஆகியவை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பின. அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியான நிலையில் ‘ரதமாரே’ பாடல் வீடியோ மட்டும் மிஸ்ஸிங். இந்தப் பாடல் ஆகஸ்ட் 5-ம் தேதியான நாளை வெளியாகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
» ‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் லுக் சனிக்கிழமை வெளியீடு
» ‘தேடவேண்டியது முடிவை இல்லை; ஆரம்பத்தை’ - வைபவ்வின் ‘ரணம்’ டீசர் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
52 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago