புதுச்சேரி: “எங்கள் அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். மற்றவர்கள் சூப்பர் ஆக்டர்ஸ். விஜய் வரட்டுமே. ரஜினியே என்ன சொன்னார், ‘நான் அதே இடத்தில் இருக்க முடியாது. யாராவது வரவேண்டும்’ என்று தானே சொல்லி வழிவிடுகிறார்” என்று நடிகர் பிரபு பேசியுள்ளார்.
புதுச்சேரியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, “பான் இந்தியா படங்கள் உருவாவது ஆரோக்கியமான விஷயம் தான். தென்னிந்திய படங்களை வட மாநில மக்கள் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்ப் படங்களுக்கு பெரிய மவுசு உண்டு. நான் டெல்லி, மும்பை செல்லும்போது, ‘தாதா ஜி வி லவ் தமிழ் பிக்சர்ஸ்’ என கூறுகின்றனர். தமிழ் படங்களுக்கு அங்கே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். சமூகத்துக்கு அவர் எதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அவர் வருவது மகிழ்ச்சி” என்றார்.
மேலும் அவரிடம், “அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்களே?” என கேட்டதற்கு, “எங்கள் அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். மற்றவர்கள் சூப்பர் ஆக்டர்ஸ். விஜய் வரட்டுமே. ரஜினியே என்ன சொன்னார், ‘நான் அதே இடத்தில் இருக்க முடியாது. யாராவது வரவேண்டும்’ என்று தானே சொல்லி வழிவிடுகிறார். ரஜினி சூப்பர் ஸ்டார் தான். மற்றவர்கள் அந்த இடத்துக்கு வந்தால் சந்தோஷம்தான். தேவர் மகன் படம் பார்த்தீர்கள். அதில் தேவர் போனதுக்கு பிறகு இந்த சீட்டில் சின்ன தேவர் வந்து உட்காருகிறார். தம்பி அஜித்தும் இருக்கிறார். வரட்டும் யார் வேண்டுமானாலும் வரட்டும்” என்றார் பிரபு.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago