படப்பிடிப்பில் கீழே விழுந்தது லிண்டா குமார்; கீர்த்தி சுரேஷ் அல்ல

By ஸ்கிரீனன்

படப்பிடிப்பின் போது கீழே விழுந்தது கீர்த்தி சுரேஷ் அல்ல என்று விளக்கம் அளித்தார்கள்.

சமீபத்தில் படப்பிடிப்பின் இடையே, நடிகை ஒருவர் பாறையில் வழுக்கி விழுவது போன்று வீடியோ ஒன்று சமூகவலைளத்திலும், வாட்ஸ்-அப்பிலும் வைரலாக பரவி வருகிறது. 'தொடரி' படத்தில் அந்த வீடியோ பதிவில் இருந்தது போன்றே உடையணிந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருந்ததால், அவர் தான் வழுக்கி விழுந்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் விசாரித்த போது, "த்ரிவிக்ரம் - பவன்கல்யாண் படப்பிடிப்புக்காக வெளிநாட்டு படப்பிடிப்பில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். நீங்கள் பார்த்த வீடியோ பதிவு, இந்தியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அந்த வீடியோவில் இருப்பது அவரே அல்ல" என்று பதிலளித்தார்கள்.

ஆனால், உண்மையில் 'Kunjiramante Kuppayam' என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பின் போது லிண்டா குமார் என்பவர் வழுக்கி விழுந்திருக்கிறார். அவரை தான் அனைவருமே கீர்த்தி சுரேஷ் விழுந்துவிட்டார் என்று செய்திகள் பரப்பி இருக்கிறார்கள். விரைவில் லிண்டா குமார் குணமாகி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்