ஆக.25-ல் ‘ஹர்காரா’ ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையைச் சொல்லும் படம், ‘ஹர்காரா’. இதில் காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ, கவுதமி, ‘பிச்சைக்காரன்' மூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு பிலிப் ஆர்.சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மலைக்கிராமத்துக்குச் செல்லும் போஸ்ட்மேன் ஒருவர் அங்குப் படும் அவஸ்தையையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும், பின்னணியாகக் கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் இந்தப் படத்தில் உள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வரும் 25-ம் தேதி படத்தை வெளியிடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE