ஹிப்னாடிக் த்ரில்லர் கதையில் பிரபுதேவா

By செய்திப்பிரிவு

பிரபுதேவாவின் 60-வதுபடத்துக்கு ‘வுல்ஃப்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். வினோ வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் இதற்கு முன், ராய் லட்சுமி நடித்த ‘சிண்ட்ரெல்லா’ படத்தை இயக்கியவர். இந்தப்படத்தில் வசிஷ்டா என் சிம்ஹா, ராய் லட்சுமி, அஞ்சு குரியன், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் உட்பட பலர் நடிக்கின்றனர். அம்ரிஷ் இசையமைக்கிறார். சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் பற்றி வினோ வெங்கடேஷ் கூறியதாவது:

இது வரலாற்றுக் காலத்தில் இருந்து இப்போது வரை பயணிக்கும் கதையை கொண்ட படம். ‘ஹிப்னாடிக் திரில்லர்’ வகை படம். ஹாலிவுட்டில் இது போன்ற கதைகள் வந்துள்ளன. தமிழில் உருவாவது இதுதான் முதன்முறை. திகில் மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். படத்தின் வில்லன் மற்றும் கதாநாயகன் இருவரும் ஓநாயின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பதுதான் கதையின் கரு. வழக்கமான படமாக இல்லாமல் புதிய அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். விரைவில் படம் வெளியாக இருக்கிறது. பிரபு தேவாவுக்காக விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார். அந்தப் பாடல் வரும் 16-ம் தேதி வெளியாகிறது.

இவ்வாறு வினோ வெங்கடேஷ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்