படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமே உண்மையான வலி தெரியும்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்

By கா.இசக்கி முத்து

‘‘பட வெளியீட்டுக்கு முன்பாக ரொம்ப பயப்படுவேன். சரியாக இருக்கிறதா? ஏதாவது குறைக்க வேண்டுமா? எப்படி விளம்பரப்படுத்தலாம் என்றெல்லாம் யோசிப்பேன். படம் வெளியானவுடன் வெற்றி, தோல்வி என, என்னவாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு பாடம் கிடைக்கும். அதை கற்றுக்கொண்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவேன். அந்த வகையில் ‘இப்படை வெல்லும்’ ரொம்ப திருப்தியாக இருக்கிறது’’ என்று மிகுந்த தன்னம்பிக்கையோடு பேசிய உதயநிதி ஸ்டாலினோடு ஒரு நேர்காணல்.

படம் முழுக்க ஓடிக்கொண்டே இருப்பீர்களாமே..?

கதைப்படி என்னை யாராவது துரத்திக் கொண்டிருப்பார்கள், இல்லைஎன்றால், நான் யாரையாவது துரத்திக்கொண்டே இருப்பேன். இந்த இரண்டுமே இல்லையென்றால் கார் துரத்தல் காட்சிகள் இருக்கும். ‘தொட்றா பார்க்கலாம்’ என்ற பாடலை பாண்டிச்சேரி யில் 3 நாட்கள் படமாக்கினார்கள். அந்த 3 நாட்களாக காலையில் 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை பாண்டிச்சேரியில் நான் ஓடாத சாலைகளே இல்லை. அந்த அளவுக்கு ஓடியிருக்கிறேன். இவை அனைத்தையுமே மிகவும் கஷ்டப்பட்டு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் காட்சிப்படுத்தியுள்ளார்.

தற்போது படங்களின் தணிக்கைக்கு 68 நாட்களாகும் என அறிவித்துள்ளது, சரியா?

அனைத்துமே இணையவழிக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். அதிகபட் சம் 68 நாட்களாக இருக்கிறது. சான்றிதழ்கள் உள்ளிட்டவை சரியாக சமர்ப்பித்தால், குறைந்தபட்சம் 20 நாட்களுக்குள் படத்தை தணிக்கை செய்துவிடலாம். முன்பு மாதிரி ‘பட வெளியீடு நாள் நெருங்கிவிட்டது, சீக்கிரம் தணிக்கைச் செய்து தாருங்கள்’ என்பதெல்லாம் இனிமேல் முடியாது. இதை நான் நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன்.

சமீபகாலமாக ரூ.100 கோடி வசூல், ரூ.200 கோடி வசூல் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கிறார்கள். இதில், ஒரு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக உங்களுடைய கருத்து என்ன?

படத்தின் தயாரிப்பாளருக்குக் கூட உடனடியாக தனது படம் எவ்வளவு வசூல் என்பது தெரியாது.

வசூலாகி அதில் இருந்து வரியைக் கழித்து, விநியோகஸ்தர்கள் - திரையரங்கு உரிமையாளர்களுக்கு பங்குத் தொகை கழித்தது போக, தயாரிப்பாளருக்கு பணம் கிடைக்கும். அவர்கள் போடும் முதலீட்டில் சுமார் 60 சதவீதம் வசூலாகி வந்தாலே பெரிய விஷயம். சில திரையரங்குகள் எல்லாம் படத்தின் வசூலை பாக்கி வைத்துவிடுவார்கள். நான் தயாரித்த சில படங்களுக்கு கடந்த ஆண்டு வரை பணம் பாக்கியிருந்தது. சில தயாரிப்பாளர்கள் இவ்வளவு வசூல் ஆனது’ என்று போட்டுக் கொள்வதில் சந்தோஷமடைகிறார்கள்.

அதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ள மட்டுமே முடியும். படத் தயாரிப்பாளருக்கு மட்டுமே உண்மையான வலி தெரியும்.

சமீபத்தில் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவு வைரல் ஆனதே..?

சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறேன் என்று என்னை சொல்வார்கள். அது அப்பாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டதுதான். அப்பா வின் உடற்பயிற்சி வீடியோவைப் பார்த்து நாமும் இனிமேல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்கும் தோன்றியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்