சென்னை: ‘மாமன்னன்’ திரைப்படத்தை பார்த்த பிறகு படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார் நடிகர் சிவகுமார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படம் வெளிவந்தது.
அரசியல் கட்சிக்குள் இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை அழுத்தமாக சொன்ன திரைப்படம். பரவலான வரவேற்பை பெற்றிருந்தது. அண்மையில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
“தம்பி மாரிசெல்வராஜுக்கு! மாமன்னன் திரைப்படம் பார்த்தேன். இது படமில்லை. உங்கள் வாழ்க்கையில் கண்ட வலி. பாதிக்கப்பட்டவன்தான் இவ்வளவு ஆழமாகச் சொல்ல முடியும். திரைப்படம் மூலம் இன்னும் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி நிறைய உள்ளது. உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன். விரைவில் சந்திப்போம்” என நடிகர் சிவகுமார் இந்தப் படத்தை பாராட்டியுள்ளார்.
» மனைவியை பிரிகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: 18 ஆண்டுகால மண வாழ்க்கைக்கு முடிவு
» மணிப்பூர் கலவரத்தால் 14,000 பள்ளி மாணவர்கள் இடப்பெயர்வு: மத்திய கல்வி அமைச்சகம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago