அன்புச்செழியன் குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுக்கு பூர்ணா விளக்கம் அளித்திருக்கிறார்.
கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளரான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர் அன்புசெழியன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தனது கடிதத்தில் எழுதி வைத்திருந்ததால், அது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சசிகுமார் நாயகனாக நடித்து தயாரித்துள்ள 'கொடிவீரன்' படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் பூர்ணா. அசோக்குமார் மரணத்தைத் தொடர்ந்து அன்புச்செழியனை ஆபாச வார்த்தைகளால் தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியிருந்தார்.
அந்த ட்விட்டர் பக்கம் அவருடையதுதானா என்று பூர்ணாவிடம் கேட்டபோது:
ட்விட்டர் பக்கம் என்னுடையது தான். நான் தான் அப்படி திட்டியிருந்தேன். 'கொடிவீரன்' படத்தின் தயாரிப்பின்போது அவ்வளவு அன்பாக அசோக்குமார் அனைவரையும் கவனித்துக் கொண்டார். அவர் இறந்த செய்தி கேள்விப்பட்டு மதுரைக்கு சென்றேன். அவருடைய மறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் மிகவும் அழுதேன். அக்கடிதத்தைப் பற்றி கேள்விப்பட்டேன்.
அன்புச்செழியன் என் தற்கொலைக்கு காரணம் என்று தெளிவாக எழுதி வைத்திருக்கிறார். இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு ஊர்திரும்பும் போது, எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். எனக்கு அன்புச்செழியன் யார் என்று தெரியாது, ஆனால் அசோக்குமாரை தெரியும். நான் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago