‘‘அப்போது நான் தூக்கமில்லாமல் இருந்தேன்...” - ‘போர் தொழில்’ இயக்குநர் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “போர் தொழில் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என விரும்பினேன். ஆனால், அது எனக்காக அல்ல. தயாரிப்பாளர்களுக்காக” என்று படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “போர் தொழில் படத்தின் ரிலீஸை முன்னிட்டு நான் தூக்கமில்லாமல் இருந்தேன். நாங்கள் சிறந்த படத்தை தான் எடுத்திருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என விரும்பினேன். அது எனக்காக அல்ல. என்னை நம்பி பணம் போட்டு பொருளாதார ரீதியாக ரிஸ்க் எடுக்க துணிந்த தயாரிப்பாளர்களுக்காக.

படத்தில் நடித்த நடிகர்கள் பல மாதங்கள் மிகப் பெரிய உழைப்பை செலுத்தினார்கள். ‘போர் தொழில்’ குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வேண்டும் அதை அவர்களுக்கு காட்ட வேண்டும் என நினைத்தேன். இன்று படம் திரையரங்குகளில் வெளியாகி 50ஆவது நாளை எட்டியிருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆஃபீஸில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. ஊடகங்களுக்கும், எந்த ஸ்பாய்லர்ஸையும் பரப்பாமல் படத்தை கொண்டாடி வெற்றிபெறச் செய்த பார்வையாளர்களுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE