தனது மகன் உமாபதியை நாயகனாக்கி 'உலகம் விலைக்கு வருது' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார் தம்பி ராமையா.
'மனுநீதி' மற்றும் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. தொடர்ச்சியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் வரவே, இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியே இருந்தார்.
தற்போது மீண்டும் படமொன்றை இயக்கி வருகிறார். ’உலகம் விலைக்கு வருது' என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் நாயகனாக தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடித்து வருகிறார்.
மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, ஒய்.ஜி.மகேந்திரன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'பவர் ஸ்டார்' சீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட படப்பிடிப்பில், பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் இப்படத்தை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஒளிப்பதிவாளராக பி.கே.வர்மா, இசையமைப்பாளராக தினேஷ், எடிட்டராக கோபிநாத், கலை இயக்குநராக வைரபாலன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago