15 Years of Subramaniapuram | திரையரங்குகளில் ‘சுப்ரமணியபுரம்’ ரீ-ரிலீஸ்: சசிகுமார் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆகஸ்ட் 4-ம் தேதி ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என படத்தின் இயக்குநர் சசிகுமார் அறிவித்துள்ளார்.

2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. சசிகுமார் இயக்கி, நடித்து, தயாரித்திருந்த இப்படத்தில் ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் 'சுப்ரமணியபுரம்' மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களில் ஒன்றாக இன்று வரை இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என படத்தின் இயக்குநர் சசிகுமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் ஒருமுறை அந்த அனுபவத்தை உயிர்ப்பிக்க ஆகஸ்ட் 4-ம் தேதி ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்