‘இந்த உலகம் உழைக்கிறவன தான் நம்பும்’ - யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: யோகிபாபு நடித்துள்ள ‘லக்கி மேன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லக்கி மேன்’. திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்க வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்துக்கு இசையமைக்கிறார்.

உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனினின் வாழ்க்கையைப் பேசும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி? - “இந்த உலகம் அழகோட இருக்குறவன ரசிக்கும், அறிவோட இருக்குறவன மதிக்கும். பணத்தோட இருக்குறவன பாத்து பொறாமைப்படும். பவர்ல இருக்குறவன பாத்து பயப்படும். ஆனா என்னைக்குமே உழைக்கிறவன மட்டும்தான் நம்பும்” என்ற டீசரின் முதல் வசனம் ‘லக்கி மேன்’ என்ற டைட்டிலிருந்து முரண்படுகிறது. அதிர்ஷடத்துக்கும் உழைப்புக்குமிடையே இருக்கும் முரணை படம் பேசும் எனத் தெரிகிறது.

இறுதியில் ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ என்ற வசனத்தை தொடர்ந்து ‘விவசாயம் பண்ணுங்க. அதவிட்டு என்னென்னமோ பண்றீங்க’ என தனது ஸ்டைலில் டீசரை முடித்து வைக்கிறார் யோகிபாபு. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.டீசர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்