திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கிறேன்: ஆர்யா

By ஸ்கிரீனன்

திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஆர்யா தெரிவித்திருக்கிறார்.

ஆர்யாவுக்கு நீண்ட நாட்களாக பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சமீபத்தில் அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் பேசியுள்ள வீடியோ பதிவு சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ஆர்யா பேசியிருப்பதாவது:

கடந்த வாரம் திருமணம் செய்வது தொடர்பாக பேசிய வீடியோ வெளியாகிவிட்டது. அது எனக்குத் தெரியாமல், என் நண்பர்கள் விளையாட்டுத்தனமாக செய்த ஒரு விஷயம். ஆனால், அதில் பேசிய விஷயங்கள் அனைத்துமே உண்மைதான். திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கிறேன்.

பொதுவாக திருமண இணையதளம், நண்பர்கள், குடும்பத்தினர் மூலமாக தனக்கான துணையை தேர்வு செய்வார்கள். ஆனால், நான் அப்படியல்ல. எனக்கு இப்படியெல்லாம் பெண் இருக்க வேண்டும் என்ற எந்தவொரு நிபந்தனையுமே கிடையாது.

உங்களுக்கு என்னைப் பிடித்திருந்தால், நான் உங்களுக்கு நல்லதொரு கணவனாக இருப்பேன் என்று நினைத்தீர்கள் என்றால் 73301-73301 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இதை விளையாட்டுத்தனமாக செய்கிறேன் என்று எண்ண வேண்டாம். இந்த நம்பருக்கு அழையுங்கள். உங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறேன்.

இவ்வாறு ஆர்யா பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்