நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் நாயகனாக நடிக்கவுள்ள படத்துக்கு 'ஜருகண்டி' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
நிதின் சத்யா படத்தயாரிப்பில் ஈடுபட நீண்ட நாட்களாக கதைகள் கேட்டு வந்தார். அதில் பிச்சுமணி கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அதில் ஜெய் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இப்படத்துக்கு 'ஜருகண்டி' என தலைப்பிடப்பட்டு படப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளராக மாறியிருப்பது குறித்து நிதின் சத்யா கூறியிருப்பதாவது:
இயக்குனர் பிச்சுமணியும் நானும் இக்கதைக்கு பொருத்தமான தலைப்பாக மட்டும் இல்லாமல், மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் தலைப்பாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்தோம். அப்படித்தான் 'ஜருகண்டி' என்ற தலைப்பை இறுதி செய்தோம்.
இது பிறமொழி வார்த்தையாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பிரபலமான வார்த்தையாக இருந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் 'ஜருகண்டி' ஒரு முக்கிய படமாக இருக்கும். பலராலும் கவனிக்கப்படும்.
நாயகியாக ரேபா ஜான் மற்றும் ரோபோ ஷங்கர், டேனி, அமித், இளவரசு, மைம் கோபி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். போபோ சஷி இசையமைப்பாளராகவும், ப்ரவீன் எடிட்டராகவும் பணிபுரியவுள்ளார்கள்.
மேலும், இப்படத்தை எனது 'ஷ்வேத் ' நிறுவனமும் பத்ரி கஸ்தூரியின் 'ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
17 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago