டிரெய்லர் வெளியீட்டில் உணர்ச்சி வசப்பட்டது ஏன்?- சமுத்திரக்கனி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, தமிழில் இயக்கிய படம், ‘விநோதய சித்தம்’. இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதன் தெலுங்கு ரீமேக்கை இப்போது அவர் இயக்கியுள்ளார். பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ‘ப்ரோ’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். வரும் 28-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் உணர்ச்சி வசப்பட்டார் சமுத்திரக்கனி.

அது ஏன் என்பது பற்றி அவர் கூறும்போது, ‘‘நான் தமிழில் இயக்கிய ‘விநோதய சித்தம்’ திரையரங்கில் வெளியாகவில்லை. அதனால் ரசிகர்கள், அந்தப் படத்தை எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்பதை என்னால் அறிய முடியவில்லை. ஆனால், ‘புரோ’ முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் ரசிகர் களின் ஆரவாரத்தையும் வரவேற்பையும் பார்த்தபோது என்னால் பேச முடியவில்லை. இப்படி ஓர் ஆரவாரத்தை நான்கு வருடங்களுக்குப் பிறகு கேட்டதால் உணர்ச்சிவசப்பட்டேன். அவர்களின் சத்தத்தைக் கேட்ட பிறகு நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டேன்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்