குடும்பத்தினருக்கு கிடைத்த அன்புக்கு நன்றி: விக்ரம் நெகிழ்ச்சி

By ஸ்கிரீனன்

எனது குடும்பத்தினருக்கு கிடைத்த அனைத்து அன்புக்கு நன்றி என்று வீடியோ பதிவில் விக்ரம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவனத் தலைவர் சி கே ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தற்போது மகளின் திருமணத்திற்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் வீடியோ வடிவில் நன்றி தெரிவித்திருக்கிறார் விக்ரம்.

அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ''எனது குடும்பத்தினருக்கு கிடைத்த அனைத்து அன்புக்கு நன்றி. அக்‌ஷிதா - மனு திருமணத்திற்கு மழையிலும், வெள்ளத்திலும் வந்தீர்கள். மிக்க நன்றி'' என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்