சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள மாவீரன் திரைப்படம் சுமார் 75 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக கடந்த 14-ம் தேதி வெளியானது.
இந்த படம் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக தகவல். இந்த சூழலில் தற்போது 75 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
» மணிப்பூர் பிரச்சினை | மாநிலங்களவை 12 மணி, மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
» தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி டிக்கெட் சேவை தற்காலிகமாக பாதிப்பு
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago