சினிமாவில் அற்புதமான சமூகக் கருத்தைச் சொல்லியிருக்கிறது 'அறம்' என்று இயக்குநர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அறம்'. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் 'அறம்' குறித்து இயக்குநர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்திய படங்களில் அர்த்தமுள்ள, சிறந்த படம் 'அறம்'. அது உங்களைக் கடுமையாக பாதித்து, சிந்தனையைக் கிளற வைக்கும்.
சினிமாவில் ஒரு அற்புதமான சமூகக் கருத்தைச் சொல்லியிருக்கிறாரகள். அந்தக் குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டுமே என நான் வேண்டிக் கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு படக்குழுவினர் நேர்த்தியாக அதனைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள்.
இந்தக் கதையை ஒப்புக்கொண்டு, அற்புதமாக நடித்திருக்கும் நயன்தாராவுக்கு பாராட்டுகள்! அவரில்லாமல் இப்படம் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது!
இந்தத் தரமான படத்தை கதையை ஒப்புக் கொண்டதற்கும், தயாரித்ததற்கும் ராஜேஷுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை வெளியிட்டு, பரவலாக ரசிகர்களைச் சென்றடைய வைத்த ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரனுக்கும் நன்றி.
வலுவான எழுத்தும், அந்தக் கதையை எடுத்த விதமும் நல்ல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு அறம் படத்தின் வெற்றியே உதாரணம். இத்தகைய மாஸ்டர் பீஸ் படத்தை எடுத்த இயக்குநர் கோபி அவர்களையே எல்லாப் புகழும் சாரும்.
அறம் - கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
இவ்வாறு விஜய் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago