15 நொடிகளில் காலியான ‘ஜெயிலர்’ ஆடியோ விழா டிக்கெட்டுகள்!

By செய்திப்பிரிவு

சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள் 15 வினாடிகளில் காலியானதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ மற்றும் 'Hukum’ ஆகிய பாடல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராஃப், சுனில் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான 1000 இலவச டிக்கெட்டுகளுக்கான லிங்க்-ஐ சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டது. இந்த லிங்க் வெளியிடப்பட்ட 15 வினாடிகளில் அனைத்து டிக்கெட்களும் காலியானதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்