சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ‘இந்தியன் 2’. காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகின்றன. இந்நிலையில் அங்குச் சென்றுள்ள இயக்குநர் ஷங்கர், புகழ்பெற்ற லோலா விஷுவல் எபெக்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நவீன தொழில்நுட்பத்தை ஸ்கேனிங் செய்துக் கொண்டிருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
வயதைக் குறைத்துக் காட்டும் தொழில் நுட்பத்துக்குப் பெயர் பெற்றது, இந்த லோலா நிறுவனம். அதனால் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனை இளமையாகப் பார்க்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.
‘விக்ரம்’ படத்துக்காக கமல்ஹாசனை சில காட்சிகளில் இளமையாகக் காட்ட இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த நினைத்தார் லோகேஷ் கனகராஜ். அதற்கான செலவு அதிகம் என்பதால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டார் என்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
36 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago