நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01க்கு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோ எப்படி இருக்கிறது?
காடு, மலை தாண்டி வீரர்கள் மடிந்திருக்கும் நிலையில், ஒருவரை சூர்யா கொல்லும் ஷாட் உடன் கங்குவா கிளிம்ப்ஸ் தொடங்கி கூஸ்பம்ப்ஸ் தருகிறது. சிறுத்தை சிவாக்கே உரித்தான நான் ஸ்டாப் டயலாக் பின்னணியில் தெறிக்கவிட, சூர்யாவின் கெட்அப் கவனம் ஈர்க்கிறது. இறுதியில் நலமா என சூர்யா கேட்கும் வித்தியாசமான தொனியுடன் முடிகிறது. கிளிம்ப்ஸ் வீடியோ முழுக்க படத்தின் பிரமாண்டம் தெரிகிறது.
வீடியோவை காண - இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago