ஜூலை 28-ல் ரஜினியின் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Kaavaalaa’ பாடல் கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார். அருண்ராஜா காமாராஜா பாடலை எழுதியிருந்தார்.ஷில்பா ராவ், அனிருத் இணைந்து பாடியிருந்தனர். படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Hukum’ பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராஃப், சுனில் உள்ளிட்ட ஸ்டார்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்