காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சதீஷின் சீரியஸ் நடிப்பில் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘வித்தைக்காரன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடிக்கும் படம் ‘வித்தைக்காரன்’. க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், சுப்ரமணியம் சிவா, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விபிஆர் இசையமைத்துள்ளார். யுவா கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, அருள் இளங்கோ சித்தார்த் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் டீசரை படக்குழு இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? - இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சதீஷ் முதல்முறையாக சீரியஸ் கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார். டீசரின் தொடக்கத்தில் மேஜிக் நிபுணராக அறிமுகம் ஆகிறார் சதீஷ். துறைமுகம், தங்கம், வைரம், கடத்தல் கும்பல், கஸ்டம்ஸ் அதிகாரிகள் என மிகவும் சீரியஸான விஷயங்களைப் பேசும் டீசரில் காமெடியின் சாயல் துளியும் இல்லாமல் பார்த்துக் கொண்டது தெரிகிறது. படமும் இப்படியே இருக்குமா என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும். இரண்டு பெரிய கடத்தல் கும்பலுக்கு இடையே அப்பாவியான சதீஷ் எப்படி சிக்கி மீள்கிறார் என்பதுதான் படத்தை ஒற்றைவரியாக இருக்கலாம் என்பதை டீசரின் மூலம் யூகிக்க முடிகிறது. ‘வித்தைக்காரன்’ டீசர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago