2.0 படத்துக்காக அக்‌ஷய்குமாரின் மெனக்கிடல்

By ஸ்கிரீனன்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் ஒலிப்பதிவுக்காக அக்‌ஷய்குமாரின் மெனக்கிடலால் படக்குழு நெகிழ்ச்சியில் இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் '2.0'. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

'2.0' படத்தில் ரஜினியோடு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அக்‌ஷய்குமார். தனது கதாபாத்திரத்திற்காக தினமும் 4 மணி நேர மேக்கப், பிரத்யேக உடைகள் என கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்.

இந்நிலையில், டப்பிங்கிற்காகவும் மெனக்கிட்டுள்ளார் அக்‌ஷய்குமார். இது குறித்து படக்குழுவினரிடம் கேட்ட போது, "அவருடைய கதாபாத்திரத்தின் பின்னணியைத் தெரிவிக்க முடியாது. படத்தின் போஸ்டர்களில் உள்ள அவருடைய லுக்கைப் பார்த்தாலே அவருடைய கதாபாத்திர தன்மை தெரியும்.

அதற்காக தனது குரலையும் வித்தியாசப்படுத்தி டப்பிங் பேசியிருக்கிறார். அக்குரலையும் ஒலி வல்லுநர் ரசூல் பூக்குட்டி மாற்றி வித்தியாசப்படுத்துவார். இதனால், படத்தில் இது அக்‌ஷய்குமாரின் குரலா என்று நம்பமுடியாத அளவுக்கு இருக்கும். அக்கதாபாத்திரத்துக்கும் பொருத்தமாக இருக்கும்" என்று தெரிவித்தார்கள்.

முன்பு ஜனவரி 25-ம் தேதி வெளியீடு என்று படக்குழு உறுதிப்படுத்தியிருந்தாலும், தற்போது அந்த தேதியில் வெளியாகுமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு மீண்டும் அறிவிக்கவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்