“என் சினிமா பணிக்கு கிடைத்த அங்கீகாரம்” - ‘காவாலா’ வரவேற்புக்கு தமன்னா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: ’ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தமன்னா, ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர். மோகன்லால் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக.10-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் இருந்து ‘காவாலா’ என்ற பாடல் கடந்த 6-ம் தேதி வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே இப்படம் பெரும் வைரலானது. இன்ஸ்டா ரீல்ஸின் இப்போது வரை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. இப்பாடல் இதுவரை 5.6 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘காவாலா’ பாடலுக்கு கிடைக்கும் அன்பு மிகவும் நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இது உண்மையில் சினிமாவில் என்னுடைய பணிக்கான நிகரில்லா அங்கீகாரம். உங்களுடைய அன்பும் ஆதரவும் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை என்னால் வெளிப்படுத்த இயலவில்லை. எனவே, என்னுடைய இதயத்தில் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமன்னா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்