சென்னை: நடிகை சமந்தா, விஜய்தேவரகொண்டா ஜோடியாக ‘குஷி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. அடுத்து ‘சிட்டாடெல்’ என்ற வெப் தொடரில் நடித்து வந்த அவர், அதன் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். அவருக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சை எடுத்தும் முழுவதும் குணமாகவில்லை.
இதனால் ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை.
இந்நிலையில் அவர் ஏற்கெனவே மூன்று, நான்கு படங்களில் ஒப்பந்தமாகி, அதில் நடிப்பதற்காக முன்பணம் வாங்கியிருந்தார். இப்போது அவர் அந்தத் தொகையைத் திருப்பிக் கொடுத்துள்ளார். பொதுவாக வாங்கும் முன்பணத்தை நடிகர், நடிகைகள் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், முன்பணத்தைக் கேட்கவில்லை என்றாலும் சமந்தா திருப்பிக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
38 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago