சென்னை: நடிகை டாப்ஸி, வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். தொடர்ந்து ‘வந்தான் வென்றான்’ ‘ஆரம்பம்’ உட்பட சில படங்களில் நடித்த அவர், இப்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஷாருக்கானுடன் ‘டுங்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தனதுஅடுத்த தமிழ்ப் படம் பற்றி தெரிவித்துள்ளார்.
“நான் இப்போது ‘ஏலியன்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. படம்பற்றி இப்போது அதிகம் சொல்ல இயலாது. நான் நடித்த ‘கேம் ஓவர்’ படத்தை ரசித்தவர்கள் இதையும் விரும்புவார்கள். இதில், ஏலியனாக நடிக்கவில்லை. இந்தப் படம் எனக்கும் புதிய மற்றும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். டாப்ஸி, தமிழில் கடைசியாக, 2021-ம் ஆண்டு வெளியான ‘அனபெல் சேதுபதி’ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago