ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் '2.0' திரைப்படத்தில் முதலில் பாடல்களே வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 3டி கேமிராவில் படப்பிடிப்பு செய்யப்பட்ட படம் என்பதால், இதற்கு கிராபிக்ஸ் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. இதற்காக உலகம் முழுவதும் சுமார் 13 நிறுவனங்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இப்படத்தை முதலில் திட்டமிட்ட போது, பாடல்களே இல்லாமல் தான் முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். படப்பிடிப்புக்கு இடையே இரண்டு ரோபோக்களுக்கு காதல் வந்தால் எப்படியிருக்கும் என்று தோன்ற, தனது எண்ணத்தை மதன் கார்க்கியிடம் சொல்லியிருக்கிறார். அப்படித்தான் 'இந்திர லோகத்து சுந்தரியே' பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.
சமீபத்தில் '2.0' இசை வெளியீட்டு துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 2 பாடல்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறது படக்குழு. ஆனால், படத்தில் 3 பாடல்கள் இருக்கிறது. மற்றொரு பாடலை அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறது. ஜனவரி மாத வெளியீடாக இல்லாமல், ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்களில் மிகவும் குறைவான நேரம் ஓடும் படம் '2.0' தான். இப்படம் சுமார் 140 நிமிடங்களே கொண்டதாக இருக்கும் என்று '2.0' இசை வெளியீட்டு விழாவில் எடிட்டர் ஆண்டனி தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago