மாலத்தீவில் நடிகர் ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவு கடற்கரையில் ரிலாக்ஸாக நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Hukum’ பாடல் நேற்று (ஜூலை 17) வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தபடத்தைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி நடித்துவந்தார். அப்படத்தில் அவருக்கான படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. அடுத்து அவர் ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தொடர் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதையடுத்து சின்ன ப்ரேக் எடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் அவர் ரிலாக்ஸாக நடந்து வரக்கூடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குநர் ஞானவேல் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE